நடிகர் கார்த்தி - திரிஷாவின் ட்விட்டர் உரையாடல்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லக்ஷ்மி, விக்ரம், ஜெயம்ரவி, ஜெயராம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் - 2’. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தப் படத்தின் வெளியீட்டின் போது நடிகர் கார்த்தி, ஜெயராம், திரிஷா போன்றோர் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி, தங்களது ட்விட்டர் முகப்பு பெயரை மாற்றிக்கொண்டு உரையாடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று(மார்ச் 20) இந்தப் படத்தின் ‘அக நக’ பாடல் வெளியானது. அதை முன்னிட்டு, மீண்டும் நடிகர் கார்த்தி வந்தியத்தேவனாக மாறி குந்தவையான திரிஷாவிடம் ட்விட்டரில் ஜொல்லு விட ஆரம்பித்துவிட்டார். இவர்களின் ட்விட்டர் உரையாடல்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.