நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்டு 16 1947’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.
நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆகஸ்டு 16 1947’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.
பிரிட்டிஷ் காலத்து இந்தியாவிலுள்ள கிராமத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கவனமீர்த்தது.
இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக அறிமுக நடிகை ரேவதி சர்மா நடித்துள்ளார். தவிர, புகழ், ரிச்சர்டு அஷ்டான், ஜேசன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருப்பது ஹைலைட். படத்துக்கு இசை ஷான் ரோல்டன். ஒளிப்பதிவு செல்வகுமார் எஸ்.கே.
சிம்புவுடன் இணைந்து கெளதம் கார்த்திக் நடித்திருக்கும் ‘பத்து தல’ திரைப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘பத்துதல’ படத்துக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரவேற்புக்கு நடுவே, இப்படத்தையும் விற்பனை செய்துவிடலாம் என படக்குழு திட்டமிட்டிருக்காம்.