நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தின் ப்ரோமோ ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.
இயக்குநர் ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வெளியீட்டின் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.
‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகுமென திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், சூர்யா ஐந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும், நடிகை திஷா பதானி இதில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு இப்படக்குழுவால் வெளியிடப்பட்டது.
ஃபேண்டசி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படம் முழுக்க 3D முறையில் தயாரிக்கப்படுகிறது. வெற்றி பழனிச்சாமி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகளை அமைக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் திரைக்கதையை சிறுத்தை சிவாவுடன் இணைந்து நாராயணா எழுதியுள்ளார். வசனங்களை எழுத்தாளர் மதன் கார்க்கி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு முக்கிய அப்டேட் என்னவென்றால், இப்படத்தின் ப்ரோமோவை நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தின் பாணியில் வெளியிடவேண்டுமென ஒட்டுமொத்த படக்குழுவும் திட்டமிட்டு வேலை செய்துவருகிறதாகவும் ஒரு தகவல்.