கேரளா: 'மதம் மாறியதால் பதவி செல்லாது' -தேவிகுளம் எம்.எல்.ஏ-வுக்கு சிக்கல்

கேரளா: 'மதம் மாறியதால் பதவி செல்லாது' -தேவிகுளம் எம்.எல்.ஏ-வுக்கு சிக்கல்
கேரளா: 'மதம் மாறியதால் பதவி செல்லாது' -தேவிகுளம் எம்.எல்.ஏ-வுக்கு சிக்கல்

சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், ராஜா சட்டசபையில் நீடிக்க முடியாது.

கேரளாவில், மதம் மாறியதால் தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினரின் வெற்றி செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு விதித்துள்ளது.
பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ராஜா, கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறியதால் இட ஒதுக்கீட்டின் கீழ் அவர் சலுகை பெற முடியாது எனக்கூறி அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்தது கேரளா உயர் நீதிமன்றம். 
2021 இல் கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் தேவிகுளம் தொகுதி பட்டியலின சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்தலில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் கிறித்தவ மதத்திற்கு மாறினார். பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் பட்டியல் இனத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறிய ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமார் கேரளா உயர் நீதிமன்றத்தின் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கேரளா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேவிகுளம் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சிபிஎம் எம்.எல்.ஏ. ராஜா ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட தகுதியற்றவர் என்று கூறிய உயர் நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்தது. இப்போது ராஜா பட்டியலிடப்பட்ட சாதி / பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று நீதிமன்றம் கூறியது. 
அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளரான குமார் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என செய்த மனுவை கேரளா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   ராஜா மதம் மாறிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராஜா தேர்தலில் போட்டியிட போலி ஜாதி சான்றிதழ் தயாரித்ததாக மனுதாரர் குற்றம் சாட்டினார். அவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் 7,848 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ராஜா எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, சட்டசபையில் சிபிஎம் உறுப்பினர்களின் பலம் 99ல் இருந்து 98 ஆக குறைந்தது. சிபிஎம் மற்றும் ராஜா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், ராஜா சட்டசபையில் நீடிக்க முடியாது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com