இதனால், பணியில் ஓட்டுனர் அருண் பாபு, போக்குவரத்து காவலர் சந்தோஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கைகலப்பாக மாற, ஓட்டுநர் அருண் பாபு திடீரென காவலர் சந்தோஷை கடுமையாக தாக்கியுள்ளார். சட்டையை கிழித்து, கல்லை எடுத்து காவலர் சந்தோஷ் மீது தாக்க முயன்றுள்ளார். இதனைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், ஓட்டுனர் அருண்பாபுவை பிடித்துவைத்துக் கொண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.