குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 ; நாளை வெளியாகிறது அறிவிப்பு?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 ; நாளை வெளியாகிறது அறிவிப்பு?
நாளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் 2023-24க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

2023-24க்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள வேளாண்மைத்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சியமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இதனால் இது அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பேரவைத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இதுதவிர, பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.

முன்னதாக, கடந்த 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களிலும், நிதி மேம்பாட்டுக்கான பல்வேறு புதிய திட்டங்கள், வழிமுறைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்