சென்னை; காதலனோடு மோதல்- நள்ளிரவில் குடி போதையில் இளம்பெண் எடுத்த விபரீதம்

சென்னை; காதலனோடு மோதல்- நள்ளிரவில் குடி போதையில் இளம்பெண் எடுத்த விபரீதம்
சென்னை, கண்ணகி நகரில் உள்ள சுனாமி குடியிருப்பில் காதலனுடன் மது அருந்தி விட்டு தன்னை அடிக்கடி வந்து பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என மிரட்டி இளம்பெண் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, ஓட்டேரியை சேர்ந்தவர் 23 வயதான சோனாலி. கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் தனது தோழி சுதாராணி  என்பவரது வீட்டிற்கு தனது  காதலன் மணிகண்டனுடன் சோனாலி சென்றுள்ளார். அங்கே கூடிப்பேசிக் கொண்டிருந்த அவர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது மதுப் பாட்டிலை உடைத்து, தனது கழுத்தில் சோனாலி கீறிக்கொண்டுள்ளார். மணிகண்டனிடம், ’’நீ அடிக்கடி என்னை வந்து பார்த்துவிட்டுச் செல்லவேண்டும். இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’’ எனக் கூறிக்கொண்டே நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால், கால்கள்-இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சோனாலியை சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, திருவல்லிக்கேணியில் நேற்று நள்ளிரவு ஆறு இளம் பெண்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ள்னர். மாநகரப் பேருந்து முன் படுத்துக்கொண்டு போக்குவரத்து இடையூறு செய்துள்ளனர். தட்டிக்கேட்ட காவல்துறையினரையும் அவதூறான வார்த்தைகளால் பேசி உள்ளனர். இதில் தொடர்புடையவர்தான் இந்த சோனாலி. அவரோடு தோழிகளான சுதா ராணி, ரம்யா ஆகிய மூன்று பேரும் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளனர். மற்ற மூன்று பெண்களும் தப்பியோடி இருக்கின்றனர். இந்த மூன்று பேரையும் போலீசார் மீது இவர்களது முகவரியை கேட்டு தங்கள் வாகனத்திலேயே அழைத்துச்சென்று அவரவர் வீடுகளில் விட்டுச்சென்றுள்ளனர். 

போதை தெளிந்ததும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வர வேண்டும் என இந்த பெண்களின் உறவினர்களிடம் தெரிவித்து விட்டு போலீசார் திரும்பினர். ஆனால் மூவரும் காவல்நிலையம் செல்லவில்லை. இதையடுத்து சோனாலி, சுதா ராணி, ரம்யா ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 341 சட்டவிரோதமாக தடுத்தல், 294( பி) ஆபாசமாக பேசுதல், சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 41(1) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தான் நேற்று இரவு மீண்டும் மது அருந்திவிட்டு காதலனுடன் ஏற்பட்ட தகராறில் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து சோனாலி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்