வாடிக்கையாளர்களின் ரூ.34 லட்சம்; ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர்

வாடிக்கையாளர்களின் ரூ.34 லட்சம்; ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர்
ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக வங்கியில் செலுத்த வேண்டிய வாடிக்கையாளர்களின் கல்வி கடன் காப்பீட்டு தொகை ரூபாய் 34.10 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட எஸ்.பி.ஐ உதவி மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

வேலூர் மாநகர், காட்பாடி, காந்தி நகரில் செயல்பட்டு வருகிறது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காந்தி நகர் கிளை. இந்த வங்கி வங்கியில், ( ராஸ்மிக் ) கல்விக்கடன் பிரிவில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் விருதுநகரைச் சேர்ந்த 38 வயதான யோகேஸ்வர பாண்டியன். இவர், வாடிக்கையாளர்கள் செலுத்தும் கல்வி கடன் காப்பீட்டுத் தொகையை முறையாக வங்கி கணக்கில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

வாடிக்கையாளர் ஒருவர் காப்பீடு தொகையை செலுத்தியும் அதனை வங்கிக் கணக்கில் சேர்க்காமல் உள்ளதாக வங்கி மேலாளர் சிவக்குமாரிடம் முறையிட்டு உள்ளார். அதனையடுத்து, வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் 137 நபர்கள் செலுத்திய கல்வி கடன் காப்பீட்டு தொகை ரூ.34,10,622 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தாமல் போலியான கணக்கு காண்பித்து தன்னுடைய இரு வங்கி கணக்குகளில் செலுத்தியது தெரியவந்தது. இந்த நிலையில், யோகஸ்வர பாண்டியனை சஸ்பெண்ட் செய்துள்ளது வங்கி நிர்வாகம்.

இதுகுறித்து, எஸ்பிஐ வங்கியின் முதன்மைமேலாளர் சிவகுமார், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எஸ்பிஐ வங்கியின் கல்வி கடன் பிரிவு உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் மீது 7-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், மோசடி செய்த பணத்தை யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு மொத்த பணத்தையும் இழந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து யோகஸ்வர பாண்டியனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்