'பத்து தல' ட்ரெய்லர்; இன்று இரவு வெளியீடு

நடிகர் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ஒபேலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இந்தத் திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.
ஏற்கனவே, இந்தப் படத்தின் இரண்டு டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இன்று(மார்ச் 18) மாலை இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை