‘தசரா’ படத்துக்கு U/A சான்றிதழ்

நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தசரா’. மொத்தமாக 2 மணி நேரம் 36 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படத்திற்கு, U/A சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.
இந்தப் படத்தில் கிராமத்து இளைஞராக, இதுவரை காணாத புதிய கெட்டப்பில், புதிய களத்தில் நடித்துள்ளார் நானி.
இந்தப் படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ஓர் பான் இந்தியத் திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை