Leo Update: காஷ்மீரில் இருந்து கிளம்பிய சஞ்சய் தத்...சென்னை படப்பிடிப்பில் இணைவார்?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜீன் மற்றும் பலர் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் ’லியோ’ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்ததை காணொலி வாயிலாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் படப்பிடிப்பு ஷெடியூலை நிறைவு செய்த நடிகர் சஞ்சய் தத், அங்கிருந்து விடைபெற்றுள்ளார். மேலும், லியோ படக்குழு காஷ்மீர் ஷெடியூலை முடித்துக்கொண்டு, சென்னையில் அடுத்தக்கட்ட ஷெடியூலை தொடங்கவுள்ளனர். அதில் சஞ்சய் தத் இணையவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.
ஏற்கனவே, லியோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரெய்லர் குறித்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை