நியூ லுக்கில் இணையத்தை அதிரவைத்த STR

இயக்குநர் ஒபேலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘STR 48' குறித்த அப்டேட்டினை படக்குழு அறிவித்தது.
இப்படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்திற்காக உடல் எடையை குறைக்கவும், மார்சியல் ஆர்ட்ஸ் கலையைக் கற்கவும் சிம்பு சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், உடல் எடை குறைத்து, ஸ்டைலிஷாக விமான நிலையத்தில் எண்ட்ரீ கொடுக்கும் வீடியோவை சிம்பு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இன்று ‘பத்து தல’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மேலும், இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர். இதனால், ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை