ஓடிடியில் வெளியாகும் மனிதத்தை போற்றும் ’அயோத்தி'

நடிகர் சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியானத் திரைப்படம் ‘அயோத்தி’. மதம், சாதி, மொழி என அனைத்தையும் தாண்டி மனிதத்தை போற்றும் திரைப்படமாக வெளியான இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக பல பாராட்டுகளைப் பெற்றது. ரசிகர்களும் இந்தப் படத்தைக் கண்டு மனம் உருகி வரவேற்றனர்.
இந்நிலையில், தற்போது இந்தப் படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவல் அந்த ஓடிடி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் திரைப்படம் ‘ஜீ 5’ ஓடிடி தளத்தில் வருகிற 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் குறைவான விளம்பரத்தால் பெருவாரியான மக்களிடம் சென்றடையாத இந்தத் திரைப்படம் ஓடிடியில் நிச்சயம் பெருவாரியான மக்களைச் சென்றடைந்துவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை