கவினின் அடுத்தப் படத்தின் நாயகி இவரா...? ; உற்சாகத்தில் ரசிகர்கள்

கவினின் அடுத்தப் படத்தின் நாயகி இவரா...? ; உற்சாகத்தில் ரசிகர்கள்
நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஓர் முக்கிய நடிகராகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மற்றும் நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில், இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பல பாராட்டுகளைப் பெற்றது. கவினின் நேர்த்தியான நடிப்பு, அவருக்கென உருவாகியுள்ள ரசிகர்கள் என அனைத்தையும் வைத்து பார்க்கையில் கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் தனியிடத்தை அவர் பிடிப்பாரென பலர் பாராட்டி எழுதினர். 

இந்நிலையில், தற்போது கவினின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அடுத்ததாக நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ஓர் படத்தில் கவின் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. இந்தப் படத்தை ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களுக்கு நடன இயக்கம் செய்த சதீஷ் இயக்கவுள்ளதாகவும், ’ரொமியோ பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘டான்’, ‘டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் நடிக்கவுள்ள ஏனைய நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுமெனவும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக ஓர் தகவல் கசிந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்