ஃபகத் ஃபாசில் படத்தின் டீசர் இன்று வெளியீடு : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஃபகத் ஃபாசில் படத்தின் டீசர் இன்று வெளியீடு : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மலையாள சினிமாவ்ன் முன்னணி நடிகரான ஃபகத் ஃபாசில் தற்போது இந்தியா முழுவதும் மிகப் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். தெலுங்கில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ’புஷ்பா’, தமிழில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ எனப் படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் பெருகியுள்ளனர். 

இந்நிலையில், இவர் அடுத்ததாக மலையாளத்தில் நடித்து வரும் ‘பாச்சுவும் அத்புத விளக்கும்’ என்கிற திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7:00 மணிக்கு வெளியாகவுள்ளதாகப் அப்படக்குழுவால் அறிவிக்கப்படுள்ளது. எற்கனவே இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த டீசர் வெளியாகவுள்ளது. 

இந்தத் திரைப்படத்தை இயக்குநர் அகில் சத்யன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர்கள் ஜஸ்டின் பிரபாகரன் - மனு மஞ்சித் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் வேலாயுதம் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் இயக்குநர் சாஜிமோன் பிரபாகர் இயக்கத்தில், இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுத்தில் உருவான ’மலையன்குஞ்சு’ என்கிற படம் வெளியானது. மேலும், தமிழில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ திரைப்படத்திலும் ஃபகத் ஃபாசில் ஓர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்