கௌதம் - சரத் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் தக்ஷினா மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக் - சரத்குமார் நடிப்பில் உருவாகி வந்த ‘கிரிமினல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மிஸ்ட்ரி த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வந்துள்ள இந்தத் திரைப்படம் மதுரையை களமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்தப் படத்தில் குற்றவாளியாக நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்க, அவருக்கு எதிரான காவல் துறையினர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கௌதம் கார்த்திக் - சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் ஒபீலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை