மீண்டும் இணையும் ‘ஈரம்’ கூட்டணியில் சிம்ரன்

மீண்டும் இணையும் ‘ஈரம்’ கூட்டணியில் சிம்ரன்

2009ஆம் ஆண்டில் வெளியான ‘ஈரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் அறிவழகன். இந்தத் திரைப்படம், தமிழ் சினிமாவின் முக்கியமான ‘ஹாரர் - கிரைம் த்ரில்லர்’ ஜானர் திரைப்படமாகும். இந்தப் படத்தைத் தொடர்ந்து ’வல்லினம்’, ’ஆறாது சினம்’, ’பார்டர்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

இந்நிலையில், தற்போது அதே ’ஈரம்’ திரைப்படத்தில் நடிகர் ஆதியுடன் இயக்குநர் அறிவழகன் இணைந்து ‘சப்தம்’ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தில் ஆதியுடன் சேர்ந்து நடிகை லக்‌ஷ்மி மேனன் ஜோடியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படமும் ’ஈரம்’ படத்தைப் போலவே ஒரு ஹாரர் ட்ரில்லர் ஜானர் படமாகவே உருவாக்கப்படுகிறது. 

மேலும், இந்தத் திரைப்படத்தை இயக்குநர் அறிவழகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆல்பா ஃப்ரேம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலேயே தயாரிப்பதின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். இந்நிலையில்,தற்போது இந்தப் படத்தின் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி, வெளியகவுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை லைலாவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் ஒளைப்பதிவு செய்து வருகிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்