விஜய் டிவி-யில் புதிய சீரியல் ‘ஆஹாகல்யாணம்’

விஜய் டிவியில் ‘ஆஹாகல்யாணம்’ என்ற புதிய சீரியல் மார்ச் 20ம் தேதி முதல் திங்கள் - வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஆஹாகல்யாணத்தில் கோடீஸ்வரி மற்றும் அவரது 3 மகள்களான மகாலட்சுமி, ஐஸ்வர்யா, பிரபா ஆகியோர் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
கோடீஸ்வரிக்கு வயது வந்த மூன்று மகள்கள். தன் மகள்களுக்கு பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது கோட்டீஸ்வரியின் கனவு. அவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூர்யா மற்றும் அவனது குடும்பத்தினரை சந்திக்கிறாள். சூர்யாவையும், அவனுடைய இரண்டு சகோதரர்களையும் பார்த்த பிறகு, கோடீஸ்வரி தனது மகள்களை சூர்யாவிற்கும் அவனது சகோதரர்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து முயற்சிகளை மேற்கொள்கிறாள்.
அவளுடைய கனவு நிறைவேறுமா, இதனால் இரு குடும்பங்களில் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. இதில் சூர்யாவாக விக்ரம், கோடீஸ்வரியாக மௌனிகா, கவுதமாக விபீஷ், விஜய்யாக கணேஷ்ராம், மகாலட்சுமியாக அக்ஷயா, ஐஸ்வர்யாவாக காயத்ரி, பிரபாவாக பவ்யஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை