'லியோ' படத்திற்காக 30 கெட்டப்புகள்... விஜய்யின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு பின்னிருக்கும் கதை

'லியோ' படத்திற்காக 30 கெட்டப்புகள்... விஜய்யின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு பின்னிருக்கும் கதை

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் லியோ. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 

விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜூன், சஜ்சய் தத், மிஷ்கின் கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்த வருட துவக்கத்திலிருந்தே லியோ படம் குறித்த எக்கச்சக்க அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துவருகிறது. குறிப்பாக, லியோ டீசர் வீடியோவுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அந்த வீடியோவில் விஜய் இருக்கும் லுக் பெரியளவில் டிரெண்டானது. 

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பிறந்த தினத்தின் போது விஜய்யுடன் லோகேஷ் இருக்கும் புகைப்படமொன்று வெளியாகி வைரலானது.  அதில், கொஞ்சம் ஓல்டு ஏஜ் லுக்குடன் இருப்பார் விஜய். விஜய்யின் கெட்டப்பும் வித்தியாசமாக இருக்கும். சொல்லப் போனால், முதலில் வெளியான ‘லியோ’ டீசர் வீடியோவில் இருக்கும் விஜய் லுக் வேறு ஒன்றாக இருக்கும். 

லியோ படத்தில் விஜய்யின் லுக் சேஞ்ச் குறித்து விசாரித்தால், புதிய தகவல் கிடைத்தது. படத்துக்குப் படம் லுக்கில் வெரைட்டி காட்ட வேண்டுமென்பதில் கவனமாக இருப்பவர் விஜய். அப்படி, இந்தப் படத்துக்கான லுக்கிலும் மெனக்கெட்டிருக்கிறாராம் விஜய். 

லியோ படத்துக்காக நடந்த கெட்டப் லுக் டெஸ்டில் 30 வித்தியாசமான கெட்டப்புகளை முயற்சி செய்துபார்த்து அதன்பின்னரே, லியோவுக்கென ஒரு லுக் உறுதி செய்திருக்கிறார்கள். அந்த லுக்கில் தான் லோகேஷூடன் எடுத்த புகைப்படத்தில் இருப்பார் விஜய்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்