இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'தங்கலான்'... 15 நாள்கள் மட்டுமே மீதம்

'தங்கலான்' படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் 'கே.ஜி.ஃப்' தங்கச் சுரங்கத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து என உச்ச நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்களில் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதில் 10 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கி, இந்த ஆண்டு இறுதியில் படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1890களில் நடக்கும் கதையாக கதைக்களம் இருப்பதால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் சற்று தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை