LCUல் ரீஎண்ட்ரி கொடுக்கும் சாம்.சி.எஸ்

கைதி திரைப்படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் கைதி. ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் இத்திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் இசை மிகப்பெரிய அளவிற்கு பேசப்பட்டது. இத்திரைப்படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ்ற்கு பாராட்டுகளும் குவிந்தது. கைதி திரைப்படம் லோகேஷ் யூனிவர்ஸ் உருவானதற்கு தொடக்கப்புள்ளியாகவும் இத்திரைப்படம் அமைந்தது. இதற்குஇந்த பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர்,விக்ரம் படங்களில் அனிருத் இசையமைப்பாளரானார். மேலும் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகிவரும் 'லியோ' திரைப்படத்திலும் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதனால் லோகேஷ் யூனிவர்சில் இருந்து இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் நீக்கப்பட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் கைதி இரண்டாம் பாகத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை