மூளைக்கு கொஞ்சம் கூட வேலை கொடுக்காத ஒரு ஆடியன்ஸ் பிரெண்ட்லி படம் தான் அகிலன்
ஹார்பர்ல கிரேன் ஆப்பரேட்டரா வேலை பார்க்குற ஜெயம் ரவி, சைடுல நிழல் உலக தாதாவுக்கு கீழ இருக்குற ஹரிஷ் பேரடியோட அடியாளா இருக்குறாரு. நியாயம், தர்மம் எதையுமே பார்க்காம தான் மேல வரணுங்கிறதுக்காக என்ன வேணும்னாலும் பண்ற ஒரு சுயநலவாதியான கதாபாத்திரம் தான் அகிலன். அவர் எப்படியாவது தனக்கு மேல இருக்குற எல்லாரையும் அடிச்சி மேல வந்து இந்திய பெருங்கடலோட ராஜாவாகணும்ன்னு நினைக்கிராரு. அதுக்கு அவர் என்னவெல்லாம் பண்றாரு, கடைசியில அவர் இந்திய பெருங்கடலோட ராஜாவா ஆனாரா இல்லையான்ங்கிறது தான் கதை. அப்படின்னு சொல்லிட்டா கொஞ்சம் க்ளீஷேவா தெரியுதுல்ல. கீழ இருந்து மேல வர்றது, நிழலுலக சாம்ராஜ்யத்தைப் பிடிக்கிறதுன்னு ஏற்கனவே பார்த்த கதை தானப்பா..?. இப்போ கூட ஒரு வருஷம் முன்னாடி ‘புஷ்பா’ன்னு ஒரு படம் வந்துச்சே இப்படியெல்லாம் நாம சொல்லிருவோம்ன்னு தான் ரெண்டாவது பாதியில ஹீரோ இந்த மாதிரி விஷயங்கள்லாம் பண்றதுக்கு காரணம்ன்னு ஒரு பாகவதர் காலத்து பிளாஷ்பேக்க வச்சி மீதியுள்ள படத்துல நம்மள எப்படி செய்யிறாங்கங்கிறது தான் அகிலன்.
கடல் வழியா கடத்தல், ஹார்பர் மற்றும் கடல் வழியே நடக்கும் நிழலுலக வியாபாரம் இந்தப் படம் எடுத்துக்கிட்ட களம் ரொம்பவே புதிய களம் தான். ஆனா அது மட்டும் போதுமா, அதை எப்படி சொல்லிருக்காங்கங்கிறத எல்லாம் பர்ஸ்ட் பாப்போம். பர்ஸ்ட் பாசிட்டிவ் எல்லாம் முடிச்சிப்போம். கடல், துறைமுகத்துல ஷூட்டிங் எடுக்குறது மட்டும் இல்ல, ஷூட்டிங்க்கு பெர்மிஷன் வாங்குறதே கஷ்டம். ஆனா இந்தப் படத்துலயோ பெரும்பாலான காட்சி கடல், துறைமுகம்ல தான் இருந்துச்சு. அதுல இப்படி காட்சிகள எடுக்க இந்தப் படத்தோட குழு எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாங்கன்னு தெரிஞ்சிது. அதுக்கு வாழ்த்துகள். அடுத்ததா ஜெயம் ரவி, படத்துல அவருக்கு பெருசா நடிக்கிற அளவுக்கு ஸ்கோப் இல்லன்னாலும் தன்னோட ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் மூலமா கொஞ்சம் கன்வின்சிங்காவே தெரியிறாரு.
அகிலன் படத்தோட நெகட்டிவ்ஸ். கொஞ்சம் பிரஷ்ஷான ஒரு கதைக்களம், சினிமாவுல அறிமுகப்படுத்தப்படாத விஷயங்கள்ன்னு சொல்ல முயற்சி செஞ்சிருந்தாலும் அதை எப்படி சொல்லிருக்காங்கங்கிறது தான சினிமா. அந்த வகையில நமக்கு கொஞ்சம் கூட ரிலையபிளா, ரிலேட்டபுலா இல்லாம அப்படியே அது ஒரு பக்கம் நடக்குது, நம்ம ஒரு பக்கம் உட்காந்திருக்குற ஃபீல் தான் இருக்குது.
அகிலன் கதாபாத்திரத்துல இருந்து எந்த ஒரு கதாபாத்திரமும் சரியாவோ, இல்ல ஒரு ஆழமாவோ எழுதப்படல. இது எல்லாத்தையும் அவர் ஈஸியா பண்ணி முடிச்சிருவாரு, ஏன்னா அவரு ஹீரோ. பல நாட்டு அரச கைக்குள்ள வைச்சிருக்குற வில்லன் கூட ஹீரோ கிட்ட ஈஸியா தோற்றுப் போயிருவான். ஏன்னா அவன் வில்லன். இந்த லெவல்ல தான் இந்தப் படம் இருக்குது. படத்துல சைடு வில்லன்னா ஒரு டி.ஆர்.ஐ ஆபிசர காட்றாங்க. அந்த கதாபாத்திரம் யார் என்ன சொன்னாலும் நம்பிருது. ஹீரோ வந்து ஒரு பிளாஷ்பேக் சொன்னா உடனே அது ஹீரோ பக்கம் நிக்கிது. டக்குன்னு வில்லன் வந்து வேற ஒன்னு சொன்னா உடனே அதையும் நம்புது.
அடுத்தடுத்து இது நடக்குமா, அது நடக்குமான்னு நம்மள தேவையே இல்லாம எந்த ஒரு யோசனைக்குள்ளயும் போக வைக்காம. நம்ம மூளைக்கு கொஞ்சம் கூட வேலை கொடுக்காத ஒரு ஆடியன்ஸ் பிரெண்ட்லி படம் தான் அகிலன். படத்துல ஹீரோயினுக்கு எந்த வேலையும் இல்லை. சும்மா ஹீரோ கூடவே ஒட்டின்னு சுத்துறது தான் வேலைன்னு நம்ம எங்கையும் சொல்லிருவோமோன்னு அவங்க பார்ட் டைமா ஹார்பர் ஸ்ட்டேஷன்ல ‘சப் இன்ஸ்பெக்டரா’ வேல பாக்குற மாதிரி காமிச்சிட்டாங்க.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ், தெரியாம விக்ரம் வேதால போட்ட அந்த ‘தரரரரரா’ பிஜிஎம்ம நம்ம ரசிச்சிட்டோமோன்னு சமீபத்துல அவர் இசையமைக்கும் படக்கள பார்க்குறப்போ நினைக்கத் தோணுது. ஏன்னா அதே பார்மேட்ல கோரஸ் ஆக்ரோஷமா கத்துறதயே எத்தன படத்துல தான் போடுவாரு. அவர் படங்கள்ல ரீரெக்கார்டிங்கு கத்துற அந்த வாய்ஸ் ஆர்டிஸ்ட் விடுதலைக்காக நம்ம எல்லாரும் கூடிய சீக்கிரம் ஒரு பெட்டிஷன் ரெடி பண்ணி சைன் போட்ருவோம். எல்லாத்தையும் விட எஸ்பி.ஜனநாதன்க்கு படத்தோட தொடக்கத்துல ஒரு கிரேடிட்ஸ் போடுறாங்க. அப்புறம் இந்தப் படத்தோட இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் எல்லாருக்குமே தெரியும் எஸ்பி.ஜனநாதனோட அசிஸ்டன்ட்டுனு. ஆனா அவரோட பேருலயே இந்தப் படத்துல ஒரு கேரக்டர் இருக்குது. ஆனா அதை ஏன் இவ்வளவு மொக்கையா எழுதுனதெல்லாம் என்ன சொல்லன்னே தெரியல. மொத்தமா பாத்தோம்னா அகிலன், நம்மல கொஞ்சமும் என்கேஜ் பண்ணாத, ரிலேட் பண்ணிக்க முடியாத மற்றும் ஒரு படம். படத்தை பார்க்கணும்ன்னு நினைக்கிறவங்க அவசியம் தியேட்டர்ல பாருங்க உங்கள் சொந்த ஆபத்தில்