கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் மீண்டும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்
கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் மீண்டும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமாவில் யார் 'நம்பர் 1' நடிகர் என்ற போட்டி நடந்து வருகிறது.ரஜினி - கமல், விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு என பல போட்டிகளை பார்த்துள்ள தமிழ் சினிமா தற்போது அடுத்த போட்டிக்கு தயாராகியுள்ளதாக தெரிகிறது.
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். அதேபோல அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளவர் கார்த்தி. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தவிர்க்கமுடியாத நடிகராக உருவெடுத்துள்ளனர்.
இருவரும் முதன்முறையாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி மோதினர். கார்த்தியின் தம்பி திரைப்படமும், சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படமும் அன்று வெளியாகின. அதைத்தொடர்ந்து சென்ற ஆண்டு சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின.
இந்நிலையில் கார்த்தியின் ஜப்பான் மற்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்விருபடங்களும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.