STR 48 திரைப்படத்திற்கு யார் இசையமைக்கப்போவது என்ற குழப்பத்தில் படக்குழு இருப்பதாக தகவல்
STR 48 திரைப்படத்திற்கு யார் இசையமைக்கப்போவது என்ற குழப்பத்தில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பத்து தல' படைத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் சிம்பு, அடுத்ததாக தேசிங்பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு பீரியட் டிராமா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்க சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு, பத்து தல என பல சிம்பு படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
அதேபோல 'விக்ரம்' படத்தின் மூலம் அனிருத் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தை இம்ப்ரஸ் செய்துவிட்டதாக தெரிகிறது. அதனால் இத்திரைப்படத்திற்கு அனிருத்தை ஓப்பதம் செய்வதா இல்லை ஏ.ஆர்.ரகுமானை ஒப்பந்தம் செய்வதா என்ற குழப்பத்தில் படக்குழு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.