வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயம் ரவி விருப்பம் தெரிவித்துள்ளார்
வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயம் ரவி விருப்பம் தெரிவித்துள்ளார்
அகிலன் திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு ட்விட்டர் வாயிலாக தன்னுடைய ரசிகர்களுடன் நடிகர் ஜெயம் ரவி உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக, ரசிகர் ஒருவர் வருங்காலத்தில் முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதை பார்க்கலாமா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், "அப்படியே ஆகட்டும்" என்று கூறியுள்ளார். இதனால் அவர் விரைவில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அடுத்த ஆண்டு 'தனி ஒருவன்' திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய 50ஆவது பிறந்தநாளுக்கு முன் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'எம்.குமரன்' போன்ற ஒரு படத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.