விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிகர் சூரி தற்போது மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்
விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிகர் சூரி தற்போது மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
பல படங்களில் காமெடியனாக அசத்திய நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். 'விடுதலை' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் 'கூழாங்கல்' திரைப்படத்தின் மூலம் பல விருதுகளை அள்ளிய வினோத் ராஜ் இயக்கும் 'கொட்டுக்காளி' படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகை அன்னா பென் தமிழில் அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்த சூரி "உங்களுடன் பயணிப்பது என்றும் இனிமை. அதுவும் இத்தகைய ஒரு புது களத்தில் பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி" என்று பதிவிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.