சூர்யா - சுதா இணையும் படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று தகவல்
'சூரரைப் போற்று' வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சூரரைப் போற்று திரைப்படத்தை போல இதுவும் ஒரு உண்மைக் கதையை மையப்படுத்திய ஒரு படமாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
சூரரைப் போற்று போன்று இத்திரைப்படம் சிறிய பட்ஜெட் படமாக இல்லாமல் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பீரியட் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்திரைப்படத்திற்கு இயக்குநர் நலன் குமாரசாமி திரைக்கதை எழுத உதவியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று இந்தி ரீ மேக் பணிகளில் பிசியாக உள்ளார். அதேபோல சூர்யாவும் தற்போது 'சூர்யா 42' திரைப்படத்தின் பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறார்.