'PS 2' திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் சென்ற ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. சென்ற ஆண்டு தமிழில் வெளியாகி அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது. இத்திரைப்படம் எந்த அளவிற்கு ஹிட் ஆனதோ அதே அளவிற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் பலத்த வரவேற்பை பெற்றன.
'பொன்னியின் செல்வன் 2' ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், குந்தவை கதாபாத்திரம் தயாரான வீடியோ ஒன்றை லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், இத்திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது