விஜய் படத்தில் முதல் முறையாக... ஐமேக்சில் படமாக்கப்படும் 'லியோ'

விஜய் படத்தில் முதல் முறையாக... ஐமேக்சில் படமாக்கப்படும் 'லியோ'
விஜய் படத்தில் முதல் முறையாக... ஐமேக்சில் படமாக்கப்படும் 'லியோ'

ஐமேக்சில் படமாக்கப்படும் 'லியோ'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக  நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் எந்த அப்டேட் வெளியானாலும் இணையத்தில் வைரலாகிவிடுகிறது.  

சமீபத்தில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பதிவிட்ட இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்தது. அதாவது, லியோ படத்தில் அதிநவீன கேமிரா பயன்படுத்துவதாகப் பதிவிட்டிருந்தார். ரெட் கேமராவின் அப்டேட் வெர்ஷனான ‘வி ராப்டோர் எக்ஸ் எல்’ (V RAPTOR XL) என்ற கேமரா லியோ படத்துக்காக களமிறங்குவதாக கூறியிருந்தார்.  இதன் தொடர்ச்சியாக, மற்றுமொரு அப்டேட்டும் வெளியாகியுள்ளது. 

அதன்படி, விஜய்யின் லியோ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக இருக்கிறது. அதென்ன ஐமேக்ஸ்... ஐ-மேக்ஸ் என்று அழைக்கப்படும் இமேஜ் மேக்சிமம் தரத்தில் 'லியோ' படத்தை படமாக்க இருக்கிறார்களாம். இதனால் இத்திரைப்படத்தை தலைசிறந்த தரத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். 

ஐ-மேக்சில் படமாக்கப்படும் 3ஆவது தமிழ் படம் என்ற பெருமையையும், 17ஆவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 

ஐமேக்சில் எடுக்கப்பட்ட இந்திய படங்களின் பட்டியலை பார்ப்போம்.

1.தூம் 3 - 2013 (முதல் இந்திய படம்)

2.பேங் பேங் - 2015

3.பாகுபலி 2 - 2017 (முதல் தெலுங்கு படம்)

4.பத்மாவத் - 2018

5.கோல்டு - 2018

6.தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் - 2018

7.சாஹோ - 2018

8.ஆர்.ஆர்.ஆர் - 2022

9.கே.ஜி.எஃப் 2 - 2022

10.சம்ஷீரா - 2022

11.பிரம்மாஸ்திரா - 2022

12.பொன்னியின் செல்வன் 1 - 2022

13.பதான் - 2023

14.போலா - 2023

15.பொன்னியின் செல்வன் 2 - 2023

16.ஆதிபுருஷ் - 2023

17.லியோ - 2023

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com