சார்பட்டாவில் ’ச.நா’வைக் காணோம்...!?

சார்பட்டாவில் ’ச.நா’வைக் காணோம்...!?
சார்பட்டாவில் ’ச.நா’வைக் காணோம்...!?

சார்பட்டா பரம்பரை 2ல் யார் இசையமைப்பாளர்?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் ஆகியோரது நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் பெறும் வரவேற்பைப் பெற்றது. விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தன. நேர்த்தியான திரைக்கதை, இதுவரை தமிழ் சினிமா காணாத திரைக்களம், இசை, ஒளிப்பதிவு, தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களிலும் சிறப்பு என ’சார்பட்டா பரம்பரை’ தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஓர் திரைப்படமாகத் திகழ்ந்தது. இந்தத் திரைப்படம் வெளியானபோது இதைப்பற்றி எழுதாத இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் கிடையவே கிடையாது என்றே சொல்லலாம். 

இந்நிலையில், எவரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்தப் படத்தின் இரண்டாம் பாதியான ‘சார்பட்டா - 2’ படமாக்கப்படவுள்ளதாக இயக்குநர் பா. ரஞ்சித் அறிவித்தார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதையடுத்து, அந்த அறிவிப்பு வெளியான சில கணம் கழித்து அதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இல்லாமல் இருப்பதை பல ரசிகர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் ’சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு ஒரு முதுகெலும்பாகவே இருந்தது சந்தோஷ் நாராயணனின் இசை தான். அப்படியிருக்க, இந்தப் படத்தில் ஏன் சந்தோஷ் நாராயணனின் பெயர் இடம்பெறவில்லை என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதற்கிடையில், இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகவும், மேலும் நடிகர் துருவ் விக்ரம் ஓர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com