'வணங்கான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி தொடங்கும் என தகவல்
'வணங்கான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது
நந்தா, பிதாமகன் திரைப்படங்களை கொடுத்த பாலா - சூர்யா ஜோடி வணங்கான் திரைப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தது. கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சில காரணங்களால் திடீரென சூர்யா விலகினார். இதனால் படப்பிடிப்பு பணிகள் தடைபட்டது.
இந்நிலையில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 9ஆம் தேதி கன்னியாகுமரியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருந்த கிரித்தி ஷெட்டியும் விளைகியுள்ள நிலையில், புதிய கதாநாயகி யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது