மேக்கிங் பொறுத்தவரை ‘அகிலன்’ ரொம்ப கஷ்டமான படம்- நடிகர் ஜெயம் ரவி

மேக்கிங் பொறுத்தவரை ‘அகிலன்’ ரொம்ப கஷ்டமான படம்- நடிகர் ஜெயம் ரவி
மேக்கிங் பொறுத்தவரை ‘அகிலன்’ ரொம்ப கஷ்டமான படம்- நடிகர் ஜெயம் ரவி

‘அகிலன்’ படம் நல்லா வந்ததற்கு இயக்குநருடைய டீம் தான் காரணம்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது. 10ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. 

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று  நடைபெற்றது. அப்போது நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, 20 வருடத் திரை வாழ்க்கையில் உங்களது ஒத்துழைப்பு, பாராட்டு நிறையக் கிடைத்துள்ளது. எப்போதும் நண்பர்களாக இருக்கலாம் என ஆசைப்படுகிறேன். மேக்கிங் பொறுத்தவரை அகிலன் ரொம்ப கஷ்டமான படம், இதெல்லாம் கிடைக்குமா, இதெல்லாம் எடுக்க முடியுமா என நினைத்தபோது, தயாரிப்பாளரால் தான் இதை எடுக்க முடிந்தது. 

இந்த படத்தைச் சாத்தியமாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. பாபி மாஸ்டர் பேராண்மையிலிருந்து தெரியும். இயக்குநருடன் இணைந்து பயணித்துள்ளார். விவேக், பிசி ஶ்ரீராம் சாரின் செல்லப்பிள்ளை, அயராத உழைப்பாளி, என் அடுத்த படத்திலும் அவர் தான் ஒர்க் பண்ணுகிறார். சிராக் என் பிரதர், அவருக்கு வாழ்த்துகள். 

பிரியா தமிழ் பேசி நடிக்கும் ஹீரோயின், ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றிக்கொண்டே போகிறார், வாழ்த்துகள். தயாரிப்பாளர் சுந்தர் சார் சகோதரர் மாதிரி தான், நிறைய படங்கள் சேர்ந்து பயணிக்கப் போகிறோம். இயக்குநர் கல்யாண், மிகப்பெரிய திறமைசாலி, கடின உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர் மக்களுக்கு நல்ல விசயம் சொல்ல ஆசைப்படும் நபர். அவருக்குப் பெரிய வெற்றிகள் கிடைக்கட்டும். 

இந்தப்படம் நல்லா வந்ததற்கு காரணம் அவருடைய டீம் தான். தான்யா இந்தப்படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருப்பார். சாம் சிஎஸ் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்று தெரிவித்தார்.

முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் சுந்தர், இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன்,நடிகை பிரியா பவானி சங்கர், நடிகை தான்யா ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி எஸ், நடன இயக்குநர் ஈஸ்வர் பாபு ஆகியோர் பேசினர்.

 இந்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com