ஒரே டாக்குமெண்டரியில் இணையும் ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான்
பாலிவுட்டின் உச்சநட்சத்திரங்களான ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் ஆகியோர் நெட்பிளிக்ஸ்' ஆவணத்தொடரான 'தி ரொமாண்டிக்சில்' இணைந்துள்ளனர்.
ஸ்ம்ரிதி முந்தரா இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள ஆவணத்தொடர் 'தி ரொமாண்டிக்ஸ்'. இதுகுறித்து அவர் சில சுவாரஸ்சிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதில், மறைந்த இயக்குநர் யாஷ் சோப்ரா பற்றிய ஆவணத்தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது. பாலிவுட் ரொமான்சின் தந்தை என்று அழைக்கப்படும் அவரது வாழ்க்கையை போற்றும் வகையில் இந்த தொடர் தயாராகியுள்ளது.
இதில் முதல்முறையாக ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் ஆமீர் கான் என மூன்று கான்களும் ஒரே தொடரின் தோன்றுகின்றனர்.அதுமட்டுமில்லாமல் அமிதாப் பச்சன், ஹ்ரித்திக் ரோஷன், ராணி முகர்ஜீ, ரன்வீர் சிங், கத்ரினா கைஃப் என பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் நடித்துள்ளனர். பாலிவுட்டின் உச்சநட்சத்திரங்கள் ஒரே தொடரில் இணைந்ததற்கு ஒரே காரணம் யாஷ் சோப்ரா தான் என்று இயக்குநர் ஸ்ம்ரிதி முந்தரா கூறியுள்ளார்.
இந்தி சினிமா வரலாற்றில் ஏதாவது தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், அப்போது தனக்கு உடனடியாக தோன்றிய ஒருவர் தான் யாஷ் சோப்ரா என்று குறிப்பிட்டுள்ளார். யாஷ் சோப்ராவை பற்றி ஆவணத்தொடர் எடுக்கப்போவதாக தான் கூறியதும், அதில் பணியாற்ற நட்சத்திரங்கள் ஆர்வமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.