இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தனது இசையால் அனைத்து ரசிகர்களையும் உற்சாகப்படுத்துபவர்.
தற்போது அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
ரசிகர்கள் அவர் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அதில் ஒரு ரசிகர், தான் வாங்கிய விலையுயர்ந்த காரின் நம்பர் பலகையில் ‘ஐ லவ் ஏஆர்ஆர்’ என எழுதியுள்ளார்.
இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்த ரசிகர், ‘நான் உங்களது தீவிர ரசிகர். இன்று நான் என்னுடைய கனவுக் காரை வாங்கியுள்ளேன். அந்த காரில் எனக்கு மிகவும் பிடித்தவருடைய பெயர் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். உங்களுடைய இனிமையான இசையால் என்னுடைய வாழ்க்கையை மாற்றியதற்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
தனது தீவிர ரசிகருக்கு பதிலளித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ‘பாதுகாப்பாக வண்டியை ஓட்டுங்கள்’ என கூறியுள்ளார்.