மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய ஜி.பி.முத்து:மேடையில் உருக்கமான பேச்சு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்று வரும் பாரா வாலிபால் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து மாற்றுத்திறனாளிகள் ஐந்து பேருக்குத் தனது சொந்த பணத்திலிருந்து சக்கர நாற்காலிகள் வழங்கினார்.
அப்போது, தனது மனைவி ஒரு மாற்றுத்திறனாளி என்ற காரணத்தினால் எதிர்காலங்களிலும் தன்னால் முடிந்த உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்வேன் என்று உருக்கமாகப் பேசினார்.
மேலும் சக்கர நாற்காலிகள் வழங்குவதைத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வீடியோ காலிங் மூலம் காண்பித்து மகிழ்ந்தார்.ஜி.பி. முத்துவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை