பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்தவர் காலமானார்

பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்தவர் காலமானார்

சமூக அநீதியை மையமாக எடுக்கப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லையை சேர்ந்த தங்கராஜ் கதாநாயகனின் தந்தையாக நடித்திருந்தார். 

அவர் கிராமத்து கூத்து கட்டும் வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக இந்த படத்தில் சிலர் தங்கராஜ் வேஷ்டியை உருவி, நடுரோட்டில் ஓடவிடும் காட்சி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (பிப்.03) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவருக்கு பேச்சுக்கணி என்ற மனைவியும் அரசிளம் குமரி என்ற மகளும் உள்ளனர். முதலில் போதிய வசதி இல்லாத சிறிய வீட்டில் வசித்துவந்த பரியேறும் பெருமாள், தங்கராஜ்-க்கு நெல்லை ஆட்சியர் விஷ்ணு உதவியுடன் பல்வேறு தன்னார்வலர்கள் இணைந்து புதிய இல்லம் சமீபத்தில் கட்டி கொடுத்தனர். 

மேலும், தங்கராஜ் மகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு உதவியாக அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணி நியமனம் செய்து கொடுத்தார். இதுபோன்று பல்வேறு உதவிகள் கிடைத்த நிலையில், தங்கராஜ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 

அவரது உடல் நாளை (பிப்.04) நல்லடக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் உள்ள இல்லத்தில் தங்கராஜ் உடல் வைக்கப்பட்டு உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்