'காதல் கண்டிஷன்ஸ் அப்ளை' படத்தின் இசை வெளியீடு

'காதல் கண்டிஷன்ஸ் ஆப்ளை' திரைப்படத்தின் இசை வெளியாகியுள்ளது
இயக்குநர் ஆர்.அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காதல் கண்டிஷன்ஸ் அப்ளை'. இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் மஹத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழ்மணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.அரவிந்தன், ”புது இயக்குநர்களை வைத்து படம் எடுப்பதில் பொருளாதார சிக்கல் இருக்கிறது” என்று குறிப்பிட்டார். அதையும் தாண்டி நிதின் சத்யா, ரவீந்தர் ஆகியோர் தொடர்ந்து புதுமுகங்களை வாய்ப்பளித்து வருகின்றனர் என்று நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் மஹத், இது தன்னுடைய 16வது படம் என்றும், ஹீரோவாக முதல் படம் என்றும் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த படத்தின் மூலம் அறிமுகமாவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படத்திற்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்ட சமயத்தில் தயாரிப்பாளர் முன்வந்து உதவி செய்ததற்கு நன்றி தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை