வாழ்வின் அடுத்த நொடி நிச்சயமற்றது - நடிகர் சாந்தனு பாக்யராஜ் வேதனை

உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் (26) ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
ஆர்வமும், அதீத திறமையும் மிக்க ஓர் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் (26வயது). எந்த தீய பழக்கமும் அவனிடம் இல்லை. ஆரோக்கியமாக இருக்கும் அவனை கடவுள் சீக்கிரம் அழைத்துக் கொண்டார்.
வாழ்க்கை நிச்சயமற்றது. வாழ்க்கை மிகவும் அநியாயம்; தன்னை காப்பாற்றிக்கொள்ள அவருக்கு காலம் ஒரு சிறு அவகாசம் கூட வழங்கவில்லை. சரிந்த சில நிமிடங்களிலே சென்று விட்டார். நம் வாழ்வின் அடுத்த நொடி நிச்சயமற்றது என்பதால் நாம் அனைவரும் ஈகோ, வெறுப்பை மறப்போம். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம். மன அழுத்தத்துடனே இருக்காதீர்கள். அது உங்களை விழுங்கி விடும். ‘என்ன சார் இருக்கு இந்த உலகத்துல, அன்பைப் பரப்புங்க. அதுக்கு ஒண்ணும் செலவில்ல’அதுதான் அவன் என்னிடம் அடிக்கடி சொல்வான்’எனக் கூறியுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே