ட்ரோல் செய்யப்படும் 'போலா' படத்தின் இரண்டாவது டீசர்
போலா திரைப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் கைதி. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் நாடுமுழுவதும் இருந்து ஈர்ப்பை பெற்றது. லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்று ஒரு புதிய ஐடியா வருவதற்கு இத்திரைப்படம் ஒரு வித்தாக அமைந்தது. இதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த பாலிவுட், இதை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தது.
அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் ரீமேக்கிற்கு 'போலா' என்று தலைப்பிடப்பட்டது. படத்தின் முதல் டீசர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. ஒரிஜினல் படத்தில் இருந்து பல அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளதாக நினைத்த ரசிகர்கள், அதை ட்ரோல் செய்யத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது டீசர் இன்று வெளியானது. இதில் வரும் ராக்கெட் லாஞ்சர்களும், நம்பகத்தன்மையற்ற ஸ்டண்ட்டுகளும் சமூகவலைதளங்களில் ட்ரோலுக்குள்ளாகி வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவரும் இத்திரைப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே