’லோடாகும் லோக்கி சம்பவம்..!’ ; வெளியாகும் தளபதி 67 அப்டேட்

’லோடாகும் லோக்கி சம்பவம்..!’ ; வெளியாகும் தளபதி 67 அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ‘தளபதி 67’ படப்பிடிப்பில் பரபரப்பாக உள்ளார். ஆனால், தளபதி 67 பற்றிய பரபரப்புகள் தமிழ் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் வெகு நாட்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. 

’வாரிசு’ திரைப்பட அப்டேட்கள் வந்த காலத்திலேயே, மக்கள் பெரும்பாலும் லோகேஷ் கனகராஜின் ’தளபதி 67’ அப்டேட் குறித்து தான் ஆர்வமாக இருந்தனர் என்பதே நிதர்சனம். 

இந்நிலையில், வாரிசு படம் ரிலீஸ் ஆனதையடுத்து இன்னும் பத்து நாட்களில் ’தளபதி 67’ குறித்த அப்டேட் வெளியாகும் என  இயக்குநர் லோகேஷ் கனகராஜே தெரிவித்திருந்தார். அதன்படி, ஏற்கனவே ‘தளபதி 67’ குறித்த புரோமோ வீடியோ ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாகவும் , அது கூடிய சீக்கிரம் வெளியாகும் எனவும்  கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. 

இதனிடையே  படத்தில் ஃபஹத் பாசில் இணைந்துள்ளதாக செய்திகள் பரவின. அதனால், இந்தத் திரைப்படம் நிச்சயம் 'LCU'எனப்படும் ‘Lokesh Cinematic Universe'க்குள் சேரும் எனவும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

மறுபக்கம் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் இணையவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தப்படத்தில் இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிக்பாஸ் புகழ் ஜனனி ஆகியோர் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. 

கூடிய விரைவில் கோலிவுட்டே அதிரும் வண்ணம் ஒரு அப்டேட்டை லோகேஷிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்பது திண்ணம்.  

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்