மாலை வெளியாகும் ஆஸ்கர் தேர்வுப் பட்டியல் ; தேர்வாகுமா இந்திய திரைப்படங்கள்..?

மாலை வெளியாகும் ஆஸ்கர் தேர்வுப் பட்டியல் ; தேர்வாகுமா இந்திய திரைப்படங்கள்..?

95ஆவது ஆஸ்கர் விருதுகளின் தேர்வுப் பட்டியல் இன்று மாலை 5:30 மணிக்கு வெளியாகவுள்ளது. இதில் இந்தியாவின் சார்பாக குஜராத்திய இயக்குநர் பான் நலினின் ‘செல்லோ ஷோ’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும், ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படம் அப்படக்குழுவினரால் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குலோப் விருதை வென்ற ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் என்பது  சினிமா ஆர்வலர்களின் கணிப்பாக உள்ளது. 

இந்நிலையில், ஆஸ்கருக்கு தேர்வாக தகுதி வாய்ந்த திரைப்படங்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. 

அதில், இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கங்குபாய் கைத்தாவாத்’, இயக்குநர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ , இயக்குநர் விக்னேஷ் அக்னிஹோத்ரியின் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ இவைகளுடன் சேர்த்து இயக்குநர் ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. 

ஒரு பக்கம் ’ஆர் ஆர் ஆர்’ திரைப்படம் நிச்சயம் தேர்வுப் பட்டியலில் இடம்பெறுமென கணிப்புகளின் மத்தியில், அப்படி தேர்வானால் ஆஸ்கருக்குத் தேர்வாகும் முதல் தென்னிந்தியப் படமாகிவிடும். மேலும், தேர்வுப் பட்டியலில் ‘ஆர் ஆர் ஆர்’ மட்டும் இடம்பெறப்போகிறதா..? அல்லது மேலும் சில படங்கள் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்