மீண்டும் இணையும் 'டிக்கிலோனா' கூட்டணி

மீண்டும் இணையும் 'டிக்கிலோனா' கூட்டணி

டிக்கிலோனா படத்தின் இயக்குநர் - நடிகர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவான படம் 'டிக்கிலோனா'. 2021 செப்டம்பர் மாதம் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. 1990ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் 'பேர் வச்சாலும்' பாடல் 'ரீமிக்ஸ்' செய்யப்பட்டு இத்திரைப்படத்தில் இடம்பெற்றது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கார்த்திக் யோகி, சந்தானம் இணையும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 'வடக்குப்பட்டி ராமசாமி' என்று தலைப்பிடப்பட்ட இத்திரைடிபடத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.இதில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் யார் உள்ளிட்ட அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்