'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம்- இந்தியாவில் அதிக வசூல் செய்து சாதனை

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' இந்திய பாக்ஸ் ஆபிஸில் இதுவரை எந்த ஹாலிவுட் படமும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளது.
தற்போது, இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையை கேமரூனின் படம் பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்'-ஐ விட இப்படம் அதிகம் வசூலித்துள்ளது.
அவதார் 2 இதுவரை இந்திய பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ. 368.20 கோடி வியாபாரம் செய்துள்ளது. அதே நேரத்தில் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' இந்தியாவில் ரூ. 367 கோடி வியாபாரம் செய்தது.
ரூ. 1,900 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள அவதார் 2 படம் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அதன்படி ரூ. 16 ஆயிரம் கோடி வசூல் படைத்து வருகிறது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அவதாரின் முதல் பாகம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இப்படம் இன்னும் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், வர்த்தக ஆய்வாளர் தரண் அர்தாஷ் அவதார் 2 படத்தின் வசூல் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையில் அவதார் 2 படம் 2.024 பில்லியின் டாலரை எட்டியது. (இந்திய மதிப்பில் ரூ.1,62,69,) இதில் சுமார் 1.4 பில்லியன் டாலர் அமெரிக்க மற்றும் கனடாவிற்கு வெளியே உள்ள சர்வதேச சந்தைகளில் இருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து அவதார் 2' எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த ஆறாவது திரைப்படமாக 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' மாறியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே