மீண்டும் இணையும் 'ராட்சசன்' கூட்டணி
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளார்
அருண் குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ராட்சசன். தலைசிறந்த தமிழ் திரில்லர் படங்களில் ஒன்றாக கருதப்படும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதற்கு முன் இதே கூட்டணியில் 2014ஆம் ஆண்டு வெளியான 'முண்டாசுப்பட்டி' படமும் மிகப்பெரிய ஹிட்டானது. தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ள இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைவுள்ளது.
சத்யஜோதி தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில், படக்குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம் குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி ஹாட்ரிக் வெற்றி கொடுக்குமாறு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே