விஜய், அஜித் குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா- கங்கை அமரன் புதிய தகவல்

விஜய், அஜித் குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா- கங்கை அமரன் புதிய தகவல்

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக உள்ள நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்குமார் குடும்பத்தினர் குடும்பத்துடன் துபாய் சுற்றுலா செல்ல உள்ளதாக இசையமைப்பாளரும்,இயக்குநருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், "விஜய், அஜித் இருவரும் தற்போது இணைந்து நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டு இருக்கிறது. 

அதற்கான கதையையும் வெங்கட் பிரபு தயாரித்து வருகிறார். எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். வெளியேதான் தனித்தனியாக தெரிகிறது.

விஜய், அஜித் இருவரின் குடும்பங்கள் இணைந்து துபாய்க்கு சுற்றுலா செல்கின்றனர். இது யாருக்காவது தெரியுமா? நானே துபாயில் அவர்கள் இரண்டு பேரின் குடும்பத்துடன் இருந்துள்ளேன்.நண்பர்களாக அவர்கள் ஒற்றுமைாக இருக்கின்றனர்.

ரசிகர்கள் தான் தங்களுக்குள் அடித்துக்கொள்கின்றனர். நடிகர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.  

புரட்சித்தலைவரும் இல்லை; நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இல்லை.ஒருவரை புரட்சித்தலைவர் பட்டத்தை பெற்றுக்கொள்ள சொல்லுங்கள். மற்றொருவரை நடிகர் திலகம் பட்டத்தை வைத்துக்கொள்ள சொல்லுங்கள்.

ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் பட்டம் இருக்கிறது. இருக்கிற ஒரு சூப்பர் ஸ்டார் பட்டத்தை எதற்கு நீங்கள் திருடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.பட்டத்தால் ஒன்றும் இல்லை என்றும் மனிதனிடம் தான் இருக்கிறது" என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்