'தனி ஒருவன்- 2' கதை ரெடி- அப்டேட் கொடுத்த ஜெயம் ரவி
மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் 'தனி ஒருவன்'. அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது.
தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. 2015ல் வெளியான தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் மோகன்ராஜா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனி ஒருவன் 2 குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை ஜெயம் ரவி கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு முன் இத்திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தானும், இயக்குநர் மோகன்ராஜாவும் தங்களுடைய பணியில் பிசியாக இருப்பதால் இதுவரை படத்தின் பணிகள் எதுவும் தொடங்கவில்லை என்றும் படத்தின் கதை தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இருவருக்கும் நேரம் அமையும்போது இது படமாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே