இந்த படம் அஜித்துக்கான மாஸ் படமாக இருக்குமா? இல்லை விக்னேஷ் சிவனின் வழக்கமான பாணியில் இருக்குமா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.
விக்னேஷ் சிவன் ஏற்கனவே அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் ‘அதாரு அதாரு’ என்ற பாடலையும், வலிமையில் ‘வேற மாறி’ மற்றும் ‘அம்மா’ பாடலையும் எழுதி இருக்கிறார்.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவனிடம் “Ajith 62 - இந்த படம் அஜித்துக்கான மாஸ் படமாக இருக்குமா? இல்லை விக்னேஷ் சிவனின் வழக்கமான பாணியில் இருக்குமா?” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் நான் இயக்கிய படங்கள் அனைத்துமே காமெடி ரொமான்ஸ் கதைகள் தான். இதுவரை நான் ஆக்சன் கதைகளை இயக்கியது இல்லை.
அஜித்துக்காக நீங்கள் தயார் செய்யும் கதையை எப்படி உருவாக்க நினைக்கிறீர்களோ அப்படி சுதந்திரமாக உருவாக்குங்கள் என்று தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
அஜித்துக்கான கதை இந்த மாதிரிதான் இருக்க வேண்டும் என்று எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. அதனால் அஜித்துக்காக முற்றிலும் ஒரு மாறுபட்ட கோணத்தில் ஒரு கதையை உருவாக்கி இருக்கிறேன். கண்டிப்பாக இது அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.