‘மார்கழியில் மக்களிசை 2022’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது
இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை 2022’ நிகழ்ச்சி சென்னையில் நேற்று(28.12.12) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் பாடல்கள் மேடையில் அரங்கேற்றப்பட்டன.
இரண்டாவது நாளான இன்று ஹிப் ஹாப் இசையும், கானா பாடல்களும் அரங்கேற்றப்பட்டன.
இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். அதில் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் விரைவில் இணைந்து பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்தி ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.