கடவுளின் அருளால் என் மகன் சிலம்பரசனின் திருமணம் சீக்கிரமே நடக்கும் !

திரைப்பட இயக்குநர் , நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான டி.ராஜேந்திரன் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதோடு வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்த டி.ராஜேந்திரன் தனது மகன் சிலம்பரசனின் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார்.

மேலும் இதனைத்தொடர்ந்து நெய் தீபம் ஏற்றியும் , நவகிரக வழிபாடு மற்றும் கொடிமரம் அருகே விழுந்து மிகுந்த பக்தியுடன் தனது வேண்டுதலைக் கடவுளிடம் கோரிக்கை விடுத்தார்,

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்திரன் , தான் மறுபிறவி எடுத்துள்ளதாகவும் , கடந்த முறை பீப் பாடலால் வந்த பிரச்சனையைத் தீர்க்க இந்த வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கை வைத்தேன் .அதன் பின்பு அந்த பிரச்சனை தீர்ந்தது என்றார்.

அடுத்து , சிலம்பரசனின் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு டி.ராஜேந்திரன் கூறியிருப்பதாவது :- 

எனக்கும் எனது மனைவிக்கும் பிடித்த பெண் என்பதை தவிர்த்து, எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை,குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரரிடம் விட்டு செல்கிறேன்.இந்த கோரிக்கையை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

 மேலும் சிலம்பரசனின் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள் அனைவரும் ஆதரவுடன் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்