">

”வணங்கான்” படத்தின் புதிய கதாநாயகன் அதர்வா?

”வணங்கான்” படத்தின் புதிய கதாநாயகன் அதர்வா?

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குநர்  பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார். 

இந்த நிலையில் வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து வணங்கான் திரைப்படம் குறித்து சமீபத்தில் இயக்குநர் பாலா தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

 என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

'நந்தா'வில் பார்த்த சூர்யா, 'பிதாமகனி'ல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்" என  அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வணங்கானிலிருந்து விலகிக்கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில்,"பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா  அவர்களும் 2D Entertainment நிறுவனமும் வணங்கானில் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்." என்று அதில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் குறித்து புது தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சூர்யா வெளிநடப்பு செய்துள்ள ‘வணங்கான்’ படத்தின் அடுத்த நாயகனாக முதலில் அணுகப்பட்டவர் ஆர்யா. ஆர்யா ஸாரியா சொல்ல வாய்ப்புக்கேட்டு வணங்கி உள்ளே வந்திருக்கிறார் அதர்வா என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்